அரசியல்உள்நாடு

எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு கவலையளிக்கின்றது – இம்ரான் எம்.பி

எதிர்க்கட்சிகளைப் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு மிகவும் கவலையளிக்கின்றது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சீரற்ற காலநிலையை அடுத்து அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டமொன்று கடந்த வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

ஆளுங்கட்சி பிரதிநிதிகள் இக்கூட்டத்தில கலந்து கொண்டுள்ளனர். இக் கூட்டத்திற்கு இம்மாவட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் எனக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என்பது மிகவும் கவலையான செய்தியாகும்.

திருகோணமலை மாவட்ட மக்களின் வாக்குகளினால் தான் நானும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.

எனவே, பாதிக்கப்பட்ட எனது மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டியது எனது கடமையாகும். இந்த உரிமையை இந்த அரசாங்கம் எனக்கு மறுத்துள்ளது.

இதனால் எனது மக்களின் பாதிப்புத் தொடர்பாகவும், மீள்கட்டுமானம் தொடர்பாவும் தகவல்கள் பெறப்படுவது மறுக்கப்பட்டுள்ளது.

வளமான நாடு என்ற கோசத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டால் எப்படி வளமான நாட்டை உருவாக்க முடியும் எனக் கேட்க விரும்புகின்றேன் என்றார்.

-ஊடகப்பிரிவு

Related posts

சீனாவிடமிருந்து நன்கொடையாக 10 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி

“நான் நந்தலாலுக்காக வீட்டுக்குப் போகத் தயார்”

STF சிரேஷ்ட பெண் அதிகாரி ஒருவர் ஆண் மாறுவேடத்தில்