அரசியல்உள்நாடு

எந்த சூழ்நிலையிலும் கைவிடப்படாது மக்கள் சேவை தொடரும் – ஜீவன் தொண்டமான் எம்.பி

கடந்த சிலலநாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்கள்.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்திருந்தார்கள்.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களையும் வழங்கி வைத்தார்.

இதில் இரண்டாவது நாளாக இன்றும் நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான சமர்வில், எஸ்கடேல், ஹைபொரஸ்ட்-அல்மா ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரன பொதிகள் நேற்றைய தினம் (01) வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதோடு, தொடர்ந்தும் மக்களுக்கான சேவைகள் தடைபடாது இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், நுவரெலியா இ.தொ.கா காரியாலய உத்தியோகஸ்த்தர்களான ராஜாராம், காசிராஜ், கந்தப்பளை இ.தொ.கா இளைஞர் அணி சிரேஸ்ட அமைப்பாளர் ரமேஸ்குமார் உட்பட பலர் சென்றிருந்தனர்.

Related posts

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் மருத்துவர்களின் எச்சரிக்கை

தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறும் – பசில்

அரசின் உதவித்தொகை மலைய மக்களுக்கு இல்லையா? அமைச்சர் ஜீவன் பதில்