வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதிக்கு அவுஸ்ரேலியாவில் அமோக வரவேற்பு

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரை இன்று காலை சென்றடைந்தார்.

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேன்புல்லின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி நேற்று இலங்கையிலிருந்து புறப்பட்டார்.

அவுஸ்ரேலியாவிற்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 27ம் திகதி வரை ஜனாதிபதி அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பார்.

ஜனாதிபதியை அந்நாட்டின் ஆளுநர் நாயகம் திரு.மார்க் பிறஸ்ஸர் (Mr. Mark Fraser ) கல்வி அமைச்சர் செனட்டர் சீமொன் பிர்மிங்கம் (Simon Birmingham) மற்றும் பிரதி ஆளுநர் நாயகத்தின் பிரதிச்செயலாளர் எலிசபெத் கெலி(Elizabeth Kelly),இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பிறீஸி ஹற்சிஷன் (Bryce Hutchisson) , இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் மற்றும் உயர்ஸ்தானிய அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவுபெறுவதையொட்டி இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இன்று அவுஸ்திரேலிய ஆளுநர் பீற்றர் கொஸ்கிரேவ்வுடனும், பிரதமர் மெல்கம் டேன்புல்லுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

அதன் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையில் விரிவடைந்த ஒத்துழைப்பு பற்றிய கூட்டு பிரகடனத்தில் இதன்போது கைச்சாத்திட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணுசக்தி விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இனங்காணப்படாத சிறுநீரக நோய் தொடர்பில் ஒத்துழைப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது சம்பந்தமாக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய புவியியல் முகவரகத்திற்கும், இலங்கை புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு தொடர்பில் குறிக்கோள் ஆவணங்களை பரிமாற்றம் செய்து கொள்வதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் திருமதி ஜுலி பிஸொப், அந்நாட்டு குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் டட்டென், எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோட்டன், ஆகியோருடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளார்.

ஜனாதிபதியுடன் அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அஜித் பி.பெரேரா உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

Related posts

Parliamentary debate on Batticaloa university on the 6th

தேயிலை ஏற்றுமதி தடை நீக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து

Peradeniya Uni. Management Faculty to reopen next week