உள்நாடு

சீரற்ற வானிலையால் இதுவரை 16 பேர் பலி – ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (30) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 24 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 65 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் சிக்கி இதுவரை 19 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் 98 வீடுகள் முழுமையாகவும் 2,333 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் 245 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 8 ஆயிரத்து 984 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 596 பேர் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கம்பஹா மாவட்ட மக்களுக்கான அறிவிப்பு

இலங்கைக்கு விரைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்!!

SJB 22வது திருத்தத்திற்கு நிபந்தனை அடிப்படையில் ஆதரவு