கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, பேராறு, உல்ஹிட்டிய ரத்கிந்த, பொல்கொல்ல, நாச்சதுவ, ராஜாங்கனை, கலாவெவ மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பல நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதி நேற்று (29) பிற்பகல் முதல் இலகு ரக வாகன போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.
கனமழை காரணமாக ஹாலிஎல, உடுவர பகுதியில் புகையிரத கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்காரணமாக பதுளைக்கும் எல்லவுக்கும் இடையிலான புகையிரத சேவை மேலும் சில நாட்களுக்கு தாமதமாகும் என புகையிரத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, பசறை 16ஆவது மைல் கல் பகுதியில் மண்சரிவினால் முற்றாக தடைப்பட்ட பசறை – லுணுகல வீதியின் ஒரு பாதை இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் புத்தளம் ஆனமடுவ பிரதேசத்தில் சுமார் 20 வீடுகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன.