உள்நாடு

நுவரெலியாவில் தொடர்மழை – வெள்ளத்தில் மூழ்கிய சிறுவர் பூங்கா

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான விக்டோரியா பூங்கா மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் விக்டோரியா பூங்காவில் சிறுவர் பூங்கா பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தொடர்மழை காரணமாக இந்த சிறுவர் பூங்கா குளமாக மாறியுள்ளது. அத்தோடு சிறுவர்கள் விளையாடும் இடம் முழுவதும் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.

மேலும், விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் மற்றும் மாநகர சபையினால் பராமரிப்பு செய்துவந்த மலர் தோட்டங்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

51% வாக்காளர் அட்டைகள் விநியோகம்

editor

அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு!

சாய்ந்தமருது மதரஸா மாணவன் கொலை – வேலியே பயிரை மேயும் நிலை