அரசியல்உள்நாடு

யுனிசெப் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு

யுனிசெப் நிறுவனத்தின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹன்னான் சுலைமான், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (26) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர், சிறுவர் பாதுகாப்பு, போசாக்கு குறைபாடு மற்றும் கல்வி உள்ளிட்ட முன்னைய சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராய்ந்தார்.

யுனிசெஃப் நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான பிராந்திய பணிப்பாளர் சஞ்சய் விஜேசேகர, இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் மற்றும் பிராந்திய செயற்பாடுகளின் பிரதானி யுகோ குசாமிச்சி ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கைக் குழுவில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) மஹிந்த குணரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐ.நா மற்றும் மனித உரிமைகளுக்கான பணிப்பாளர் திலினி குணசேகர ஆகியோர் பங்குபற்றினர்.

Related posts

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

பிறப்புச் சான்றிதழ் தொடர்பிலான புதிய அறிவித்தல்

இலங்கையர் 8 பேருக்கு கொரோனா