உள்நாடு

தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் அபாயம் – தாழ்நிலப் பகுதி மக்களுக்கு அவசர எச்சரிக்கை

அடுத்த சில மணித்தியாலங்களில் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தெதுரு ஓயா பள்ளத்தாக்கில் பராமரிக்கப்படும் ஆற்று நீரின் அளவீடுகளை ஆய்வு செய்ததன் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவுக்கு அமைவாக இன்று (26) இரவு நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

நாளை கட்டுப்பணம், வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46வது கூட்டத்தொடர் இன்று

நத்தாரை முன்னிட்டு சிறப்பு புகையிரத சேவை