அரசியல்உள்நாடு

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17 ஆம் திகதி

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் அடங்கிய ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதன் இரண்டாம் வாசிப்பு உடனான வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு தொடர்பான விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, சந்தையில் நிலவும் நாட்டு அரிசியின் தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்தவும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து 70,000 மெற்றிக் தொன் ஸ்வர்ண நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Related posts

ஆறு மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் பலி

இலங்கை வந்துள்ள 33 மாணவர்களும் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு