அரசியல்உள்நாடு

அர்ச்சுனா எம்.பியுடன் கலந்துரையாடவுள்ள சபாநாயகர்

இந்த வருடம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்ததுடன், இனவாதம் குறித்து கருத்து வெளியிட்டமையினால் அவர் தொடர்பில் விவாதம் ஏற்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (24) பிற்பகல் கண்டிக்கு விஜயம் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சபாநாயகர் அசோக ரங்வல இதனை தெரிவித்தார்.

“ஒரு தனிநபராக அவரது அபிலாஷை என்னவென்று எங்களுக்குத் தெரியாது.

அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் அபிலாஷை மிகவும் தெளிவானது.

இன்று நாட்டில் அவ்வாறானதொன்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை.

அந்த மக்கள் வடக்கு, மேற்கு அல்லது கிழக்காக இருக்கலாம், நல்லிணக்கத்துடன் நாட்டை அபிவிருத்தி செய்ய தலையிடுவார்கள் என அனைத்து மக்களும் நம்புகின்றனர்.

இது ஒரு தனி நபரால் செய்யப்பட்டது என்பது எங்களுக்குத் தெரியும்.

அதுபற்றி அவரிடம் பேசி, அவரது அனைத்து முகநூல் கணக்குகளையும் சரிபார்த்தோம்.

நாமும் அவருடன் பேசலாம், புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிர்காலத்தில் இதை தெளிவுபடுத்துவோம்” என்றார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான விசேட அறிவித்தல்

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை நாளை முதல் விநியோகம்

editor

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை