அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதி அடுத்த மாதம்

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதியை அடுத்த மாதமளவில் அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதோடு ஏற்கனவே கோரப்பட்டுள்ள வேட்புமனுக்கு அமைவாகவே வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆணைக்குழு சட்ட அதிகாரம் காணப்படுகின்றது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவரான சட்டத்தரணி அமீர் பாயிஸ் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் கருத்துக்களை வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் ஏலவே கோரப்பட்டு கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. எனினும்ரூபவ் குறித்த காலத்தில் தேர்தலை நடத்துவதற்கான நிதி திறைசேரியில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கவில்லை.

இதனால் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக பிரஜைகளால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு அமைவாகரூபவ் ஏற்கனவே வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அதன்தொடர்ச்சியாக தேர்தலை முன்னெடுப்பதற்கே ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரம் காணப்படுகின்றது.

அத்துடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அடுத்து நாம் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது 30-35நாட்களுக்கு இடைப்பட்ட காலம் தேர்தலை நடத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு தேவையென்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது, ஜனாதிபதி தேர்தல்ரூபவ் பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும் மாதமளவில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். பெரும்பாலும் எதிர்வரும் வருடத்தின் முதலிரு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.

Related posts

மேல் மாகாணத்தின் ஆரம்பப் பாடசாலைகள் வழமைக்கு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் இலவச PCR பரிசோதனை

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து