தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (21) காலை ஆஜராகியுள்ளனர்.
தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 18 அமைச்சர்களிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 11 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.