அரசியல்உள்நாடு

எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமில்லை – ஜனாதிபதி அநுர

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார்.

தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்களுக்கான பொறுப்பு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், நாங்கள் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை.

எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

“ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத, கோசங்களை கட்டியெழுப்ப எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என உறுதியளிக்கிறேன்”

Related posts

ஐ.தே.கட்சியின் தலைமைப் பொறுப்பு ஒரு இளம் உறுப்பினருக்கு

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்

கொரோனா : பலி எண்ணிக்கை 96