அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் நல்ல விடயங்களுக்கு ஆதரவு வழங்குவோம், தவறை சுட்டிக்காட்டுவோம் – சஜித்

மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு மக்களின் அபிலாஷைகளை முற்போக்கான முறையில் கையாண்டு, நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்.

அரசாங்கத்துக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையை நடைமுறைப்படுத்துவதில் மக்கள் தரப்பில் இருந்து நேர்மறையான முறையில் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு எமது ஆதரவை நல்குவோம்.

அத்துடன், அரசாங்கத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனை சுட்டிக்காட்டப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இன்று (20) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

குறுகிய காலத்தில் தவறுகள் நடந்த இடங்களை கண்டறிந்து, ஓர்
குழுவாக நாமனைவரும் இணக்கப்பாட்டுடன் செயல்படுவோம். மனசாட்சியின் பிரகாரம் 2020 பெப்பரவரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி மேலும் முன்னோக்கி செல்லும். ஒற்றுமையைக் காப்பாற்றிக் கொண்டு புதிய பயணம் தொடரும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

மத்திய கொழும்பு போலவே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் சம்பிரதாய அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னோக்கிப் பயணிப்போம். ஒரு வேலைத்திட்டமாகவும், குழுவாகவும் பெரும்பான்மையினரின் மனதைக் கவர முடியவில்லை. குறைபாடுகள் தவறுகள் தவிர்க்கப்படும். கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்களை உருவாக்குவது மக்களின் விருப்பமாக காணப்படுகிறது. எனவே மக்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேசிய பட்டியல் விவகாரம் குறித்த கூட்டாக கலந்துரையாடி இணக்கப்பாட்டை எட்டுவோம். கட்சிக்காக தியாகம் செய்த கட்சியினர் ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தை பாதுகாக்கும் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை – பரீட்சைகள் ஆணையாளர்

editor

கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை

editor

பாடசாலை சீருடையை வழங்கிய சீனா – நன்றி கூறிய பிரதமர் ஹரிணி

editor