அரசியல்உள்நாடு

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிசம்பர் 2ஆம் திகதி வரையும் அவரது மனைவி நவம்பர் 22 வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவிற்குச் சொந்தமான மிரிஹான அம்முதெனிய சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்படி குறித்த கார் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அது சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட கார் என தெரியவந்துள்ளது.

ஒக்டோபர் 30 ஆம் திகதி லொஹான் ரத்வத்த, அந்த காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கட்டுகஸ்தோட்டையில் வைத்து மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ரத்வத்தவின் மனைவியான ஷஷி பிரபா ரத்வத்தவும் நவம்பர் 4ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த கார் தொடர்பில் அவர் அறிந்திருக்கவில்லை என தெரிவித்தாக மிரிஹான பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து, சந்தேகநபர் ஷஷி ரத்வத்தவும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்னர் நவம்பர் 7ஆம் திகதி சந்தேகநபர்களை நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேகநபர்களின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் சந்தேக நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அதன்படி, சந்தேகநபர்கள் இன்று காலை நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்கள் சார்பில் நீதவான் முன்னிலையில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது தரப்பினருக்கு எதிராக மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் மாத்திரமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்தக் குற்றச்சாட்டுக்கள் பிணையில் வைக்கப்படக்கூடியவை என்பதனால் எந்தவொரு நிபந்தனையின் கீழும் அவர்களை விடுவிக்குமாறும் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சந்தேகநபர்களுக்கான பிணை கோரிக்கையை நிராகரித்த நுகேகொட நீதவான், சந்தேகநபரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை டிசம்பர் 2ஆம் திகதி வரையிலும், சந்தேகநபரான ஷஷி பிரபா ரத்வத்தவை நவம்பர் 22ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

Related posts

கோவிட் தடுப்பூசி தொடர்பான மற்றுமொறு முக்கிய அறிவிப்பு!

தனிமைப்படுத்தலுக்கு பொலன்னறுவையில் விசேட மையம்

ரஞ்சன் ராமநாயக்க கைது [VIDEO]