அரசியல்உள்நாடு

தேசியப்பட்டில் ஆசனத்தை சுமந்திரனுக்கு வழங்கலாம் – சித்தார்த்தன் ஆலோசனை

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை நாம் ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், எமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேநேரம், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு, கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் தேசியப் பட்டியல் ஆசனமொன்றும் கிடைத்துள்ளது.

குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

ஏனென்றால், தேசிய மக்கள் சக்தி புதிய அரசியலமைப்பினை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 2015ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாட்டில் அவர் ஈடுபட்டவராக உள்ளார். அவருடன் இணைந்து நானும் செயற்பட்டிருந்தேன்.

அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் அவரது வகிபாகம் முக்கியமானது, கடந்த அரசியலமைப்புக்கான உருவாக்கச் செயற்பாடுகளில் ‘ஏக்கிய ராஜ்ய’ ஒருமித்தநாடு என்ற விவகாரத்தினை தவிர ஏனைய விடயங்களில் அவர் கணிசமான பணிகளை ஆற்றியிருந்தார்.

ஆகவே புதிய அரசியலமைப்பு விடயத்தினை கையாள்வதற்கு பொருத்தமானவராக அவரை நான் பார்கின்றேன். அந்த வகையில் அவருக்கு தேசிய பட்டியல் ஊடாக உறுப்புரிமை வழங்குவது பொருத்தமானது என்று கருதுகின்றேன்.

எனினும் அவர்களின் கட்சியே எதிர்காலத்தினை மையப்படுத்தி அந்த தீர்மானத்தினை எடுக்க வேண்டும் என்றார்.

Related posts

இராஜினாமாவுக்கு தயாராகும் பசில் – நாளை விசேட உரை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸுக்கு இடும் வாக்கு செல்லுபடியற்றது

editor