அரசியல்உள்நாடு

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ – அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

இந்நாட்டின் பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.

நாட்டின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஒக்டோபர் 10ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரி ஆவார்.

1985 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்ட அவர் 1997 ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வு பெற்றார்.

இவர் மொரட்டுவை வேல்ஸ் குமரி கல்லூரியின் பழைய மாணவி ஆவார்

Related posts

இலங்கையில் 17 வது கொரோனா மரணம் பதிவானது

நஷ்டம் தரும் அரசு நிறுவனங்களில் CEYPETCO இற்கு முதலிடம்

ராஜிதவின் வழக்கறிஞரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி