அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு நிறைவு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது.

அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்காளர் பட்டியலின்படி, ஒரு கோடியே எழுபத்தி ஒரு லட்சத்து நாற்பதாயிரத்து முந்நூற்று ஐம்பத்து நான்கு வாக்காளர்கள் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 ​பேர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,081 ஆகும்.

அதேநேரம், 2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையில் 12,570 பேருக்க கொரோனா

மேலும் 842,400 பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான வேன்