அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் 2,999 முறைப்பாடுகள் பதிவு

எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை) 2,999 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 808 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 2,135 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 21 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 35 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் ஜனாஸாவாக மீட்பு

முன்னாள் அமைச்சர் மயோன் முஸ்தபா காலமானார்!

சுங்க திணைக்களத்திற்கு புதிய ஆட்சேர்ப்பு!