அரசியல்உள்நாடு

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி நாட்டை ஏமாற்றி வரும் இந்த தரப்பை விடுத்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள் – சஜித்

களவு, இலஞ்சம், ஊழல் ஒழிக்கப்படும், எரிபொருள் விலை குறைக்கப்படும் என தற்போதைய ஜனாதிபதி சகல தேர்தல் மேடைகளிலும் கூறினார். அவ்வாறான ஊழல் மோசடிகள் இல்லை என அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் தற்போது தெரிவித்து வருகிறார். எரிபொருள் குறைத்து மக்களுக்கு சலுகைகளை தருவதாக கூறிய இவர்கள் தற்போது மக்களை ஏமாற்றி வருகின்றனர். எரிபொருள் விலை சூத்திரத்திற்கு தாம் அடிபணியப்போவதில்லை என கூறிய அனுரகுமார திஸாநாயக்க, எரிபொருள் விலை சூத்திரத்தின் பிணைக்கைதியாக மாறியுள்ளார். கடைசியாக பணக்கார வர்க்கம் பயன்படுத்தும் எரிபொருள் விலைகளை குறைத்துள்ளனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மின்கட்டணத்தை 33% குறைப்போன் என்றார். இதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேவையில்லை. ஆனால் இன்னும் குறைத்தபாடில்லை. நாட்டை ஏமாற்றி வரும் இந்தக் குழுவிற்குப் பதிலாக, ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்யுங்கள். நாட்டு மக்களுக்கு நிச்சயம் நிவாரணம் அளிக்கும் புதிய சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு இணக்காப்பாட்டை காண்போம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு மஹரகம பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று நேற்று (10) ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் காமினி திலகசிறி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், வரிகளை குறைப்பதற்கு அல்லது சலுகைகளை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய அரசாங்கத்துக்கு உடன்பாட்டிற்கு வர முடியாதுபோயுள்ளது. IMF தமது மீளாய்வைக் கூட பிற்போட்டுள்ளனர் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

வெள்ளவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள்

டயனா தாக்கப்பட்டமை குறித்து நாளை மறுதினம் கூடவுள்ள குழு!

பால்மா விலையில் மீண்டும் மாற்றம்?