அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

பொதுத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தல் வாக்குப்பதிவுகள் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாலும் 15ஆம் திகதி பொளர்ணமி தினம் என்பதனாலும் இரு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.

அத்துடன், பொதுத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.

அத்துடன், தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படும் தினங்களில் விதிமுறைகளை மீறிச் சட்டவிரோதமான முறையில் செயற்படும் மதுபானசாலைகளுக்கு சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹரின் சுயாதீனமாக செயல்பட தீர்மானம்

தரம் 10 இற்கு மேற்பட்ட வகுப்புகள் நாளை முதல் மீள ஆரம்பம்

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு