தாம் பாட்டாளி சாதாரண மக்கள் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், சாதாரண மக்களின் துன்பங்களை அறிவதாகவும் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வாரத்திற்கு முன்னரே திரிபோஷ தொழிற்சாலையை கலைத்து மூடும் சதியில் ஈடுபட்டுள்ளார். இது குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு எதிரான சதியாகும்.
நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த திரிபோஷ வழங்கப்பட்டு வருகிறது. மாதம் 16 இலட்சம் பக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 664920 தாய்மார்களுக்கும் 925172 குழந்தைகளுக்கும் இது வழங்கப்பட்ட வருகின்றன.
தற்போதைய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2403/53 மூலம் திரிபோஷ நிறுவனத்தை கலைப்பதற்கு அல்லது வேறு நிறுவனத்துடன் இணைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயிர்த் ஞாயிறு தாக்குதல், கொரோனா கோவிட் மற்றும் வங்குரோத்து நிலமை காரணமாக தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது என்பதை UNICEF மற்றும் ஐக்கிய நாடுகள் சபை முகவரான்மைகள் கூட ஒப்புக் கொள்ளும் சூழ்நிலையில், ஏழை வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், சாதாரண மக்களின் துன்பங்களை அறிவதாகவும் கூறிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வாரத்திற்கு முன்னரே திரிபோஷ தொழிற்சாலையை கலைத்து மூடும் சதியில் ஈடுபட்டுள்ளார்.
நமது நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இரத்தசோகையால் அவதிப்படும் குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு எதிரான சதியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு திரிபோஷா கிடைக்க வேண்டும். தனியார் நிறுவனம் மூலம் இதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை முறியடிப்பபோம். தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் இந்த உரிமைகளை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி உறுதிபூண்டுள்ளது.
இதற்கு எதிராகப் பேசுவதால், அவசர அவசரமாக அறிவிப்புகளை வெளியிட்டு, அவ்வாறு மூட மாட்டோம் என தற்போது கதைகளை பரப்பி வருகின்றனர். இலவச சுகாதாரத்தை பாதுகாக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
திரிபோஷா நிறுவனத்தை மூட நாம் ஓருபோதும் இடமளிக்க மாட்டோம் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு அவிசாவளை பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று (09) ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுதத் விக்ரமரத்ன அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க மேடை மேடையாக கூறியவை தற்போது ஜனாதிபதியாக அனைத்தும் பொய்யாகி, செயலில் நடத்திக் காட்ட தோல்வி கண்டுள்ளார் என்பதை அவரே நிரூபித்துள்ளார்.
துறைமுகத்தில் இருந்து ஒரு விலைக்கு எரிபொருள் இறக்கப்பட்டு, மற்றொரு விலைக்கு மக்களுக்கு விற்கப்படுவதாகவும், அதிக வரி, ஊழல், மோசடி, திருட்டு போன்ற காரணங்களே இதற்குக் காரணம் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் கூறிய எரிபொருள் மாபியாவை நிறுத்த முடியாது போயிருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்த இலஞ்சம், ஊழல்கள், திருட்டுக்களை கண்டுபிடிக்க முடியாது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி நியமித்த புதிய தலைவர் தெரிவிக்கிறார்.
நிதியமைச்சின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே எரிபொருள் விலையை குறைக்க முடியும், எரிபொருள் விலை குறைந்தால் நாடு வங்குரோத்தடைந்து விடும் என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கூறும்போது, ஜனாதிபதி அனுர உட்பட ஜே.வி.பி.யின் முன்னனணித் தலைவர்கள் பொய்களைக் கூறித் திரிகின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.