அரசியல்உள்நாடு

சலுகைகளை நீக்குவோம், எம்.பி.க்கள் சம்பளம், வாகனங்கள் தேவையில்லை – திலித் ஜயவீர

சலுகைகள் அற்ற அரசியலை தனிப்பட்ட பிரேரணையின் ஊடாக பாராளுமன்றத்தில் கொண்டு வர எதிர்பார்ப்பதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவர், தொழில்முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த திலித் ஜயவீர,

“நாம் செல்லும் பயணத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய அரசியலுக்கு நாங்கள் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அதனால் எங்களுடன் கைகோர்க்கவும். இதுவரை நீங்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்தீர்கள், ஆனால் உங்கள் வாழ்க்கை மாறவில்லை.

இந்த முறை உங்கள் வாக்குகள் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். எங்களை யாரும் பணம் கொடுத்து வாங்க முடியாது.

நாங்கள் அரசியலில் சலுகைகளை நீக்குவோம், எம்.பி.க்கள் சம்பளம் தேவையில்லை என்பதை இம்முறை முன்வைக்கிறோம். வாகனங்கள் தேவையில்லை, சலுகைகள் எதுவும் தேவையில்லை. மக்களுக்கு சேவை செய்கிறோம் என்றால் நாம் ஏன் அர்ப்பணிப்பு செய்ய கூடாது” என்றார்.

Related posts

சாந்த அபேசேகரவுக்கு பிணை

பாராளுமன்ற உறுப்பினர்களில் தெரிவில் மாற்றம்!

மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் ஆர்ப்பாட்டம் தொடரும்