உலகம்

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் குண்டு தாக்குதல் – 21 பேர் பலி

பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 21க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் தான் காரணம் என பலூச் விடுதலை இராணுவம் பொறுப்பேற்றுள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவ உதவிக்காக குவெட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், காயமடைந்த பயணிகளில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபகாலமாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது தவிர அங்கு பிரிவினைவாத கிளர்ச்சியும் அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாம் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம் – ட்ரம்ப்

பணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

தென்கிழக்காசிய நாடுகளுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசிகள்