அரசியல்உள்நாடு

நிச்சயம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம் – வடிவேல் சுரேஷ்

மலையக மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நிச்சயம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி ஆதரவாளர்களுக்கு கட்சியின் அறிமுகம் மற்றும் கொள்கைகளை அறிமுகப்படுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (06) ஹட்டனில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன், ஷான் பிரதீஸ் உட்பட பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுத்தேர்தலில் நான் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட திட்டமிட்டிருந்தேன். ஆனால் எமது பதுளை மாவட்ட மக்கள் என்னை விடவில்லை. மக்கள் பிரதிநிதித்துவத்தை காக்க நான் அங்கு போட்டியிடுகின்றேன்.

எனது மகனை நுவரெலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். அவரையும், இளம் பெண் வேட்பாளர் அனுஷா சந்திரசேகரனையும் நிச்சயம் பாராளுமன்றம் அனுப்பி வையுங்கள். மற்றுமொரு தொப்புள் கொடி உறவையும் அனுப்புங்கள். நுவரெலியா மாவட்டத்தில் இருந்து மொத்தம் மூவரை அனுப்பி வையுங்கள்.

அதுமட்டுமல்ல பதுளை மாவட்டத்தில் இருந்து ஒலி வாங்கி சின்னத்தில் மூன்று தமிழர்கள் பாராளுமன்றம் செல்வதை தடுக்க முடியாது. இங்குள்ள அனைவரும் எனது உறவுகள்தான். மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சதி நடக்கின்றது. இதனை என் உடன் பிறப்புகள் முறியடிக்க வேண்டும்.

என்னுடைய மக்களை அரசியல் அநாதைகளாக்குவதற்கு ஆக்குவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நாம் மாபெரும் சக்தியாக வருவோம். மலையக மக்களை எவரும் குறைவாக எடை போடக்கூடாது. புதிய சின்னம், புதிய தலைமைத்துவத்தின் கீழ் வந்துள்ளோம். எமது பின்னால் அணிதிரளுங்கள். ஆடுற மாட ஆடி தான் கறக்கணும், பாடுற மாட்டை பாடி தான் கறக்கணும். என் மக்களின் காணியை பிடிக்க விடமாட்டேன் என தெரிவித்தார்.

-கிரிஷாந்தன்

Related posts

காஸா சிறுவர் நிதியத்திற்கான நிதி கல்முனை, கிண்ணியா அமைப்புக்கள் கையளிப்பு!

ஐதேகவின் முக்கியஸ்தர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

‘கொரோனா சட்டம்’ அனைவருக்கும் ஒன்றே