அரசியல்உள்நாடு

மேடைகளில் கொடுத்த வாக்குறுதிகளை ஜனாதிபதி அநுர மீறியுள்ளார் – சஜித்

ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மேடைக்கு மேடையாக வழங்கிய வாக்குறுதிகளை மீறும் வேளையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மையைப் பெற்றுத் தந்து, மக்களின் கனவுகளை நனவாக்கும் யுகத்தை உருவாக்க வாக்குகளைப் பயன்படுத்துமாறு சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேடைகளில் தெரிவித்த கடவுச்சீட்டு வரிசைக்கான தீர்வு, உணவுப் பொருட்களின் விலையைக் குறைப்பதாக அவர் அளித்த வாக்குறுதிகள், எரிபொருள் விலைதிருத்தங்களை மேற்கொண்டு இலஞ்சம் ஊழல் நீக்கப்பட்டு குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுத் தருவேன் என பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்.

அநுர குமார திசாநாயக்க அண்மையில் நியமித்த பொற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு இவ்வாறான ஊழல்கள் தொடர்பில் போதிய தெளிவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேர்தல் மேடைகளில் ஒரு கதையையும் தற்போது வேறு விதமான கதைகளையும் தெரிவித்து வருகிறார்.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு ஜனாதிபதி அடிமையாகிவிட்டார். பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, பணக்காரர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எரிபொருளைக் குறைப்பதற்கே நடவடிக்கை எடுத்தார்.

முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், Uber, Pick me ஓட்டுநர்கள், பொது மக்கள் என சாதாரண மக்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எரிபொருள் விலைகளை குறைக்கவில்லை. எரிபொருள் மானியமும் பணக்காரர்களுக்கே செல்கிறது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கம்பஹாவில் நேற்று(06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

மின்சார கட்டணம் 33% குறைக்கப்படும் என தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மின்சார பாவனையாளர்களை அழுத்தங்களுக்கு ஆளாக்கியுள்ளார்.

ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வரிச்சுமையை குறைப்பதாக கூறிய அநுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்துடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி, சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட்டு அதன் கைதியாகி கைப்பாவையாக மாறியுள்ளார் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்ற பின்னர், அரசாங்கத்தை அமைத்து, பொது மக்கள் யுகத்தை அமைத்து அனைத்து சலுகைகளையும் வழங்குவோம் என சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியாத ஜனாதிபதி, பாட விதானங்களை பூரணமாக்காமல் உயர்தர பரீட்சையை நடத்துகிறார்.

எமது தொடர் முயற்சியால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட பாராட்டே சட்டம் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் மீண்டும் அமுலுக்கு வரவிருக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் தொழில் இடங்கள் வைப்பிலடப்பட்ட சொத்துக்கள் ஏலம் விடப்படும்.

இப்இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. 6 மாதங்களுக்கு ஒரு தடவை அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை உயர்த்துவேன் என கூறி அரச ஊழியர்களை கூட இன்று கைவிட்டுள்ளார் என சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

ஒரு மணி நேர மின் வெட்டு இரத்து

சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம்

இன்று முக்கியமான வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது.