அரசியல்உள்நாடு

மீளப் பெறப்பட்ட ஜொன்ஸ்டனின் மனு

கொழும்பு ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட BMW கார் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (05) மீளப் பெறப்பட்டது.

இந்த மனு மொஹமட் லஃபார் தாஹிர் மற்றும் பி. குமரன் ரத்னம் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரருக்கு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதால், இந்த மனுவைத் தொடர்ந்தும் பேண வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு, மனுவை மீளப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சஜித்- அனுர முன்னிலையில்: விலகியவர்களை இணைக்கவும் என்கிறார் SB

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

editor

நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்க முடியாது – ஜனாதிபதி