அரசியல்உள்நாடு

கடவுச்சீட்டுக்காக இன்றும் நீண்ட வரிசை – எதிர்காலத்தில் டோக்கன்கள் இணையத்தளத்தில்

தற்போது கையிருப்பில் உள்ள கடவுச்சீட்டுகளுக்கான டோக்கன்களை விநியோகிப்பது எதிர்காலத்தில் இணையத்தளத்தில் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், அவசர தேவைக்கு தவிர நவம்பர் மாதத்தில் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வரவேண்டாம் என தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக இன்றும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

முன்பதிவு செய்யப்பட்ட கடவுச்சீட்டுகள் வரையறுக்கப்பட்ட அடிப்படையில் வழங்கப்படும் என்பதால், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வருமாறு கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி பொது மக்களிடம், அரசாங்கம் கோரியிருந்தது.

ஆனால் இன்றும் பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை காணமுடிந்தது.

தற்போது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளுக்கான டோக்கன் வழங்கும் பணி எதிர்காலத்தில் இணையத்தளம் மூலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி

இன்றும் 2 கொரோனா மரணங்கள்

அனைத்து இபோச பேருந்துகளும் நாளை வழமை போன்று இயங்கும்