அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பொது வார்டுக்கு மாற்றம்

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அந்தப் பிரிவில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

லொஹான் ரத்வத்தேவுக்கு நேற்று (02) இரவு ஏற்பட்ட திடீர் நோய் நிலை காரணமாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரத்வத்தேவுக்கு நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நோய் நிலை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்த பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட லொஹான் ரத்வத்தே, நுகேகொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து அவதானம் செலுத்தி மருத்துவ சிகிச்சைக்கு அனுப்புமாறு நீதவான் பரிந்துரைத்ததன் காரணமாக லொஹான் ரத்வத்தேவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

Related posts

வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று

கிழக்கில் ரயில் சேவை இரத்து!