நேற்றைய (02) தினம் புத்தளம் வைட் ஹாலில் (White Hall) இடம்பெற்ற உலமாக்களுடனான மாநாட்டு நிகழ்வில் முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் 500 மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது ரிஷாட் பதியுதீன்
உரையாற்றினார்
நான்கு வருடங்களாக நான் சிறையில் அடைக்கப்பட்டேன் பல கஷ்டங்களையும் அனுபவித்தேன், எனது குடும்ப உறுப்பினர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டார்கள் அவ்வாறான சந்தர்ப்பத்தில் கூட என்னை பாராளுமன்றத்திற்கு அழைத்து வந்தார்கள் அப்போது கூட ஜனாஸாவை எரிக்காதே என்றே குரல் கொடுத்தேன் மீண்டும் என்னை கொண்டு போய் சிறையில் அடைத்தார்கள் நான் கவலைப்படவில்லை அச்சம் கொள்ளவில்லை நான் எனது சமூகத்துக்காகவே குரல் கொடுத்தேன்.
உலமாக்களின் முன் நிலையில் கூறுகிறேன் எனது உள்ளம் தூமையாது என ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் தாஹிர் மற்றும் முஹம்மது உட்பட பல அரசியல் வாதிகள் உலமாக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.