அரசியல்உள்நாடு

சிங்கப்பூர் பத்திரிகை கழகத்துடன் பிரதமர் ஹரினி சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சிங்கப்பூர் பத்திரிகை கழகத்தின் தலைவர் பெட்ரிக் டெனியெல் தலைமையிலான சிங்கப்பூர் பத்திரிகை கழக பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் தொழில்நுட்ப மற்றும் தொழிற் கல்விஇ முதலீடு என்பவற்றிற்கு பொருத்தமான சூழலை உருவாக்குவது உள்ளிட்ட இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக காணப்படும் தொடர்புகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரிஇ பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்னஇ தெற்காசியா மற்றும் ளுயுயுசுஊ அரச இராஜந்திர பணிப்பாளர் நாயகம் நிலுக கதுருகமுவ மற்றும் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி பணிப்பாளர் பூர்ணிமா அபேகுணசேகர உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related posts

கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை

இந்தியாவின் தலையீட்டால் ஆறு வருடங்களாக முடியவில்லை

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு