உள்நாடுசூடான செய்திகள் 1

எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானம்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 377 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

அத்துடன் 319 ரூபாயாக காணப்பட்ட லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 313 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Related posts

இறப்பர் செய்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி அதிகரிப்பு-அபிவிருத்தித் திணைக்களம்

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

ஆனமாலு ரங்க கொலை : குடு ரொஷானின் சகோதரன் கைது