அரசியல்உள்நாடு

பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட ரணில் அரசியலில் இருந்து விடைபெறுகின்றார் இல்லை – பிரதமர் ஹரிணி

பொதுமக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட தனது தொகுதியில் பலமுறை தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனக்கு அரசமைப்பு குறித்து கற்பிக்க வேண்டுமா என பிரதமர் ஹரிணி அமரசூரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தலில் 17 முறை தோல்வியடைந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து விடைபெறுகின்றார் இல்லை தொடர்ந்தும் தனது அரசியல்வாழ்க்கையில் தொங்கிக்கொண்டிருக்கின்றார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மக்கள் மாறிவிட்டார்கள் என்பதை தன்னை நிராகரித்துவிட்டார்கள் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை நாங்கள் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களின் ஆணையே அரசமைப்பின் அடிப்படை இதனை புரிந்துகொள்ளாத ஒருவர் எனக்கு எப்படி அரசமைப்பு குறித்து கற்பிக்க முடியும் ? அரசமைப்பினை நன்கறிந்த ஒருவர் தேர்தல்களை ஒத்திவைக்கமாட்டார்,தேசிய பேரவை நீதித்துறையின் தீர்மானங்களில் தலையிட மாட்டார்,எனக்கு அரசமைப்பினை கற்பிப்பது என்றால் ரணில் விக்கிரமசிங்க விற்கு இந்த அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும் என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தங்களிற்கு அனைத்தும் தெரியும் ஏனையவர்களிற்கு எதுவும் தெரியாது எனநினைத்து செயற்பட்ட தலைவர்களாலேயே இலங்கை அழிந்து போனது அவ்வாறான அரசியல் கலாச்சராத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று போராட்டம் – சிறிதரன் அழைப்பு.

இலங்கையில் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்ய இந்தியா தயார்

தீர்வுக்காக சுகாதார அமைச்சரை சந்திக்கும் பதில் நிதியமைச்சர்!