நாட்டில் மீண்டும் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச அலுவலகங்கள், தூதரகங்கள் மற்றும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் கலந்துரையாடுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதோடு அதற்கான பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் புலனாய்வுத் துறை, இராணுவம் மற்றும் பொலிஸாரை பலப்படுத்தினால் இவை அனைத்தையும் எதிர்கொள்ள முடியும் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.