பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் முன்வைத்து மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தினமொன்றை நிர்ணயித்தது.
தனக்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு வருடகால கடூழிய சிறைத்தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு கோரி தேரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று விசாரணைக்க எடுக்கப்பட்ட போது இதனை ஆராய்வதற்கு தினமொன்றை நியமிக்குமாறு தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இதற்கமைய அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 3ம் திகதி மனு விசாரணைக்கு எடுக்கப்படுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.