அரசாங்கத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 3.5 பில்லியன் ரூபா பெறுமதி சேர் வரியை செலுத்த தவறிய வழக்கில், 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரசிக்சரூக், நீதிமன்றத்தில் காரணங்களை முன்வைத்து, இந்த பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு குற்றவியல் வழக்காக மாறியுள்ளதால் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
தீர்ப்பை அறிவித்த மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க, இது உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் சான்றிதல் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட வழக்கு என தெரிவித்தார்.
இது ஒரு மாற்றுத் தண்டனை என்பதாலும், குற்றவியல் வழக்காக இல்லாததாலும் பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் இதன்போது நீதவான் குறிப்பிட்டார்.