அரசியல்உள்நாடு

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை – மஹிந்த

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி – தேர்தல் ஏற்பாடுகள் எப்படி உள்ளன?

” தயாராக உள்ளோம்.”

கேள்வி – பொதுஜன பெரமுனவின் வெற்றி எவ்வாறு உள்ளது?

“வெற்றி மிக எளிதாக உள்ளது.”

கேள்வி – நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா? தற்காலிக விலகலா?

‘‘தற்காலிக… அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை.

கேள்வி – ஜனாதிபதியின் உரையை நீங்கள் செவிமடுத்தீர்களா? முதன்முறையாக இக்குழுவினர் ஓய்வு பெறுகின்றனர் என்றார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

“இல்லை, நான் கேட்கவில்லை.. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. “

ராஜபக்ஷக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சமூகக் கருத்து உருவாகியுள்ளது தானே?

“ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலின் கேட்கிறார். 113 இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.”

Related posts

நாட்டினை வந்தடையவுள்ள மேலும் இரு டீசல் கப்பல்கள்

ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் ஞாயிறன்று கலந்துரையாடல்

கித்சிறி கஹபிட்டிய கொரோனாவுக்கு பலி