அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் 113 இற்கும் அதிகமான ஆசனங்களை பெற்று வரலாற்று சாதனைப் படைப்போம் – பிரதமர் ஹரிணி

பாராளுமன்ற தேர்தலில் 113 இற்கும் அதிகமான ஆசனங்களை இம்முறை எங்களால் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பிரதிநிதித்துவத்தை பெற்று இம்முறை பாராளுமன்றத்தில் வரலாற்று சாதனைப் படைப்போம் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று தேசிய மக்கள் சக்திக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும், “ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றியை பொதுத் தேர்தலில் மீண்டும் உறுதிப்படுத்துவோம். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வேலைத்திட்டங்களை பலமாக கொண்டு செல்வதற்கான பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்வோம்.

மக்களுக்கு இதுவரையில் நாங்கள் பொய் வாக்குறுதிகளை வழங்கியதில்லை. சகலருடனும் ஒன்றிணைந்து செயற்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் ஊழல்வாதிகளுடன் எங்களுக்கு எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை. நாட்டு மக்களை ஏமாற்றியவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் நாட்டை கட்டியெழுப்ப நேர்மையாக செயற்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

113 இற்கும் அதிகமான ஆசனங்களை இம்முறை எங்களால் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பிரதிநிதித்துவத்தை பெற்று இம்முறை பாராளுமன்றத்தில் சாதனை படைப்போம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் எந்த தடங்களும் ஏற்படாது. எங்களின் நிலைப்பாடுகளையும் வெளிப்படுத்தி வெற்றிகரமாக இந்த பேச்சுவார்த்தையை நிறைவு செய்வோம்” என்றும் சுட்டிக்காட்டினார்

Related posts

புதிய விலையில் புதிய தேசிய அடையாள அட்டை

மின்னுற்பத்தி திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனை

எஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் 2வது சொட்டு நாளை முதல்