அரசியல்உள்நாடு

வீட்டு சின்னத்தில் தமிழரசு கட்சி போட்டி – வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்து

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் வீட்டு சின்னத்தில் போட்டியிட தமிழரசு கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று (10) கையெழுத்திட்டனர்.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி. சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ச. சுகிர்தன், அகேசவன் சயந்தன், இமானுவேல் ஆர்னோல்ட், தி.பிரகாஷ், ச. இளங்கோ, ச. சுரேக்கா, சி. கிருஷ்ணவேணி ஆகியோர் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

Related posts

இன்றைய மின்வெட்டு அட்டவணை

பல்கலைக்கழகங்கள் முழுமையாக ஆரம்பிக்கப்படுமா?

06 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு