உள்நாடு

குர்ஆனை அவமதித்த வழக்கு – ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பிடியாணை பிறப்பித்து கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு கொழும்பில் பொதுபலசேனா அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ​​குர்ஆனை அவமதித்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது, ​​அவர் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த முறைப்பாட்டிற்காக கொம்பனி வீதி காவல்துறையினர் நீதிமன்றில் முன்னிலையாகினர். இது தொடர்பான விசாரணையை எதிர்வரும் மார்ச் 5, 2025க்கு ஒத்திவைத்தார் நீதவான்.

இதேவேளை குரகல பிரதேசத்தில் இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

ஆதாரங்களின்றி சோதனை செய்ய மறுப்பு !

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1700 ஐ கடந்தது