எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட களத்தில் வேட்பாளராக மன்னார் தொகுதியில் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இரு வேட்பாளர்கள் தெரிவில் தொடர்ந்து இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன் ஆரம்பத்தில் தேர்தல் களத்திலிருந்து ஒதுங்குவதாக அறிவித்து பின்னர், ஆதரவாளர்களின் வற்புறுத்தல் காரணமாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்த நிலையில் மீண்டும் நேற்றைய தினம் (8) இந்த தேர்தல் களத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மன்னாரில் இருந்து மேலும் இரு வேட்பாளர்களை தெரிவு செய்ய மன்னார் தமிழரசுக் கட்சிக் கிளை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் பலர் தமிழரசுக் கட்யினால் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரையில் அவர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என தெரியவருகிறது.
வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் முடிவு இன்று இறுதி நிலைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
-லெம்பட்