அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் மஹிந்தவின் இல்லம் பாடசாலைக்கு

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, கொழும்பு பேஜெட் வீதியிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அவர் இன்றைய தினம் (08) வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரச அதிகாரிகள் , முன்னாள் அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்க வேண்டுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்திருந்தது.

குறித்த இல்லத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு வழங்குவதற்காக பிரேரணை மஹிந்த அமரவீரவினால் முன்னாள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணைக்கு முன்னாள் அரசாங்கத்தின் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இல்லத்தை கைமாற்றுவதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் பாடசாலையினால் குறித்த சொத்தினை பயன்படுத்திக் கொள்ள சந்தர்ப்பம் உள்ளதெனவும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கோப் குழு செவ்வாயன்று கூடுகின்றது

பணம் பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நடவடிக்கை என்கிறது SJB

2021 வரவு செலவு திட்டம் : ஒக்டோபரில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி