உள்நாடு

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்

சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பதில்பொலிஸ்மா அதிபராக நியமிக்கும் ஜனாதிபதியின் முடிவிற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கடந்த மாதம் 27ம் திகதி அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சிரேஸ்டபிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பதில்பொலிஸ்மா அதிபராக நியமித்தார்.

அன்றைய தினமே ஜனாதிபதியின் செயலாளர் நியமனக்கடிதத்தை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் இன்று அரசியலமைப்பு பேரவை இந்த நியமனத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

Related posts

சாதகமான முடிவொன்றினை எதிர்பார்த்து பிரதமரை சந்திக்கின்றோம்

மற்றுமொரு மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் பாதிப்பு

ஆசிரியர்கள் மற்றும் கல்வியியல் ஊழியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்