அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று கட்சியின் நியமன குழு கூடிய அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார்.
சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தனது அம்பாறை மாவட்ட குழு தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தற்போது நமது கட்சியின் செயலாளருக்கு தனித்து போட்டியிட வேண்டும் என கோரிதன் பிரகாரம் தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தை தனித்து போட்டியிடும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் தேசிய கூட்டணி தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.