அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை – 30க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் தீர்மானம்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என 30 க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒன்பதாவது பாராளுமன்ற த்தை பிரதிநிதித்துவம் செய்தவர்களில் பல அமைச்சர்கள் உட்பட 30க்கும் அதிகமானவர்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

சிலர் அரசியலுக்கு முற்றாக முழுக்கு போட தீர்மானித்துள்ளனர்சிலர் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல தீர்மானித்துள்ளனர்.

இந்த பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன முன்னாள் சபாநாயகர்கள் சமல் ராஜபக்ச மகிந்த யாப்பா அபயவர்த்தன முன்னாள் அமைச்சர்கள் ஜோன் செனிவரத்தின ஜி எல் பீரிஸ் அலி சப்ரி பந்துல குணவர்த்தன திஸ்ஸ விதாரணவாசுதேவ நாணயக்கார ஆகியோரின் பெயர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய அரசியல் குறித்து காணப்படும் பொதுவான எதிர்ப்புணர்வு காரணமாக சிலர் இந்த முடிவை எடுத்துள்ள அதேவேளை சிலர் வயது காரணமாகவும் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளனர்.

சில மூத்த அரசியல்வாதிகள் முற்றாக அரசியலில் இருந்து விலகாமல் ஆலோசகர்களாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

தனது அறிவை அனுபவத்தை பகிர்ந்துகொள்வதற்காக நூலொன்றை எழுதவுள்ளதாக தெரிவித்துள்ள சிரேஸ்ட அரசியல்வாதியொருவர் தான் அரசியல் கலாச்சாரம் குறித்து களைப்படைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்

பல அரசியல்வாதிகள் எதிர்வரும் வாரங்களில் தங்கள் அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

Related posts

நிலவும் காலநிலையில் மின்தடை

வவுனியா வாகன விபத்தில் 5 பேர் பலி

“பிரதமர் பதவி விலகுவதே சிறந்தது, தீர்மானம் பிரதமர் கையில்”