அரசியல்உள்நாடு

திலித் ஜயவீரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (05) தாயக மக்கள் கட்சியில் (மவ்பிம ஜனதா கட்சி) இணைந்துகொண்டனர்.

அங்கு, தாயக கட்சியின் தலைவரான திலித் ஜயவீர கேகாலை மாவட்டத்தில் ஆசன அமைப்பாளர் பதவியை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதன் பின்னர் மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் ரொஷான் ரணசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை வழங்க வேண்டும், அது 113 ஆசனங்களாக இருக்க வேண்டும்.

150 ஆசனங்களை கொடுக்க வேண்டாம். 150 உறுப்பினர்களின் ஆதரவை அவர் கோரும் போது நாங்கள் கொடுப்போம்.

அதாவது திருடிச்சென்ற பணத்தை மீள கொண்டுவருவார் என்றால் அதற்காக நாங்கள் ஆதரவை வழங்குவோம்.

பிரதான எதிர்க்கட்சியாக சர்வஜன அதிகார கூட்டணியுடன் இணைந்துள்ள மவ்பிம மக்கள் கட்சிக்கு ஆதரவை வழங்குங்கள். நிச்சயமாக சிறந்த தரப்பினர், முன்மாதிரியாக செயற்படும் அணியொன்று அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுக்கும்”என்றார்.

Related posts

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி – ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

ராஜபக்ஷ பிடியில் சிக்கிய விஜயதாசவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை [VIDEO]