அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் களமிறங்கும் நிமல் அணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் போட்டியிட தீர்மானித்துள்ளது.

கட்சியின் அரசியற்குழு மற்றும் மத்திய செயற்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எவ்வாறாயினும், இந்த கூட்டணியின் கீழ் போட்டியிடும் இந்த முடிவு இந்த தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்” என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியுடன் புதிய சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு தமது கட்சி எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிமல் டி சில்வா அணி அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணிக்கலாம்

ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு – அனுரவிற்கு சாதகமான நிலை

editor

‘காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்க வேண்டும்’