அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரித்தானிய மன்னர்

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு வழிகாட்டுவதில் சாத்தியமான அனைத்து வெற்றிகளையும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியின் கீழ் இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே உள்ள நெருங்கிய உறவு மேலும் ஆழமடைவதை காண்போம் என மன்னர் சார்ள்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.

“C.O.P.29 நெருங்கி வருவதால், நமது சமுத்திரங்களைப் பாதுகாக்கவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும், காலநிலை அபாயங்களைச் சமாளிக்கவும், நமது நாடுகள் கூட்டாளிகளாகவும், நவீன பொதுநலவாய நாடுளின் உறுப்பினர்களாகவும் இணைந்து செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் அவர்களினால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் சார்ள்ஸ் மன்னரின் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

தந்தையோடு சேர்ந்து திட்டம் தீட்டி கணவனை வெட்டி படுகொலை செய்த மனைவி

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை

எனக்கு உதவாத அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும் – ஆவேசப்பட்ட அலி சப்ரி ரஹீம்!