அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு – ரஞ்சித் மத்தும பண்டார

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கென இளைஞர்களின் அங்கத்துவத்தை அதிகரிப்பதற்கு வேட்புமனு குழு கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை வழங்கும் போது மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.

இளைஞர் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவது கீழ் மட்டத்திலுள்ள கட்சி அங்கத்தவர்களின் நிலைப்பாடாக உள்ளதால் அதற்கு செவிசாய்க்கும் வகையில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பெண்கள் மற்றும் இளைஞர்களை உள்வாங்கும் வகையில் புதிய வேட்பாளர்கள் மூவர் அல்லது மாவட்ட ரீதியில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

”ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/25″ விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

தபால் மூலமான வாக்களிப்பு விண்ணப்ப காலக்கெடு நீடிப்பு [UPDATE]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு