அரசியல்உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திகதி அறிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பு திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 2024.10.14 ஆம் திகதி அளிக்க முடியும் என்பதுடன், குறித்த திகதியில் தமது தபால் மூல வாக்கை அளிக்க முடியாவிடின் எதிர்வரும் 20214.10.18 ஆம் திகதி தான் கடமையாற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் அளிக்க முடியும்.

காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து பணிகளையும் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது.

இதற்கமைய தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்து வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களுக்கான வாக்காளர் அட்டை எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை விநியோகிக்கப்படும்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 2024.10.12ஆம் திகதிமுதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தற்காலிக அடையாள அட்டையை வழங்குவது 2024.10.22ஆம் திகதிவரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

திங்கள் முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவித்தல்

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் குறித்து விசேட கலந்துரையாடல்